Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பேய் கனவால் தூக்கமின்றி அவதிப்படும் நவ்யா நாயர்

சென்னை: ‘அழகிய தீயே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’, ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பல்வேறு மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர், 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இந்நிலையில் பேய் கனவுகளால் தூக்கம் தொலைந்தது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய நவ்யா நாயர், ‘சிறுவயதில் இருந்தே பயமுறுத்தும் மோசமான பேய் கனவுகளை கண்டு வருகிறேன். இந்த கனவுகளால் நள்ளிரவு 2 மணிக்கு திடுக்கிட்டு எழுந்திருக்கிறேன். மீண்டும் தூங்க முயற்சித்தாலும் அதே கனவுகள் வரும். அதன்பிறகு தூங்க பயமாக இருக்கும். கனவில் என்னை சுற்றி பாறைகளும், மணலும் உள்ள கற்பனை உலகில் நான் சிக்கி இருப்பேன். சுற்றி கருப்பு நிறத்தில் ஒரு விசித்திரமான உயிரினம் இருக்கும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்களுடன் பார்க்க பேய் போலவே இருக்கும். அதை கனவில் பார்த்து மிகவும் பயப்படுவேன்’ என கூறியுள்ளார்.