மும்பை: மைக்ரோமேக்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி ராகுல் சர்மாவை காதலித்து மணந்தார் நடிகை அசின். தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டரிலிருந்து கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அசின் நீக்கியிருந்தார். இதனால் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல் சர்மாவுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் பாலிவுட்டில் பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அசின் கூறியிருப்பதாவது:
தற்போது கோடை விடுமுறையின் நடுவில், ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்து காலை உணவை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் கற்பனையான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளைக் கண்டோம்.எங்கள் திருமணத்தைத் திட்டமிடும் எங்கள் குடும்பத்தினருடன் நாங்கள் வீட்டில் அமர்ந்திருந்த நேரத்தை இது நினைவூட்டுகிறது. நாங்கள் தீவிரமாகப் பிரிந்துவிட்டோம் என்று கேள்விப்பட்டோம்? தயவுசெய்து இதைவிட சிறப்பாக யோசியுங்கள். ஒரு அற்புதமான விடுமுறையின் 5 நிமிடங்களை இந்த விளக்கத்துக்காக வீணடித்ததில் ஏமாற்றம். இவ்வாறு அசின் கூறியுள்ளார்.