சென்னை: விக்ரமின் ‘சாமி’, ‘ஆறு’, ‘மலைக்கோட்டை’, ‘முண்டாசுப்பட்டி’, ரஜினி நடித்த ‘பேட்ட’ போன்ற ஐம்பதுக்கும் மேல் படங்களில் நடித்த ஆதேஷ் பாலா, சமீபத்தில் வெளியான ‘பிதா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
பிதா படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், கதாநாயகன் இல்லாத அந்தப் படத்தில் கதையின் நாயகனாக படம் முழுக்க வருகிறார். 23’ மணி 23’ நிமிடங்களில் எடுக்கப்பட்ட பிதா படத்தில், ஆதேஷ் பாலா தனது அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்தாக இயக்குனர் சுகன் கூறுகிறார். இனி வில்லத்தனம் கலந்த ஹீரோவாகவும் நடிப்பேன் என்கிறார் ஆதேஷ் பாலா.