சென்னை: மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள படம், ‘வெப்பன்’. சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் இப்படத்தை தொடர்ந்து எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் படம், ‘சிரோ’. மலையாள நடிகர் அக்ஷய் ராதாகிருஷ்ணன், கமர்ஷியல் பைலட் பிரார்த்தனா சாப்ரியா, ரோகிணி, ‘போர்தொழில்’ லிஷா சின்னு, ‘சூப்பர் டீலக்ஸ்’ நோபல் நடிக்கின்றனர். சி.வி.கிஷன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ராஜாராம் எழுதி இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘சிரோ என்பது கற்பனை கதாபாத்திரம். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் தேவதை. பிரார்த்தனாவை நேரில் பார்த்தபோது, இந்த வேடத்துக்கு அவர் நியாயம் சேர்ப்பார் என்று உணர்ந்தேன். பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற காம்ப்ளக்ஸ் சப்ஜெக்ட் கொண்ட இப்படம், குறிப்பிட்ட ஜானருக்குள் வராது. ஒவ்வொரு 20 அல்லது 25 நிமிடங்களுக்கு மேல் கதைக்களம் மாறும். பெண்கள் அதிக சக்தி கொண்டவர்கள், எப்படியாவது தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தனித்துவ குணம் படைத்தவர்கள் என்பதை சொல்கிறேன். சிஜி, விஎப்எக்ஸ், அனிமேஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்படுகிறது’ என்றார்.
30