நடிகை ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் நடித்துள்ள வெப்சீரிஸ், ‘குட் ஒய்ஃப்’. ஆங்கிலத்தில் ஒளிபரப்பான ‘தி குட் ஒய்ஃப்’ என்ற வெப்சீரிஸின் ரீமேக்கான இது, இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. இதையொட்டி நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியாமணி, ‘ஓடிடி சீரிஸ்கள், திரைப்படங்கள் என்று அனைத்துமே நமக்கு ஒரே தளம்தான். கிடைக்கின்ற எந்த வாய்ப்பையும் விட்டுவிடாதீர்கள். அந்த வாய்ப்புகள் உங்களை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லலாம். இந்த சீரிஸில் எனது கேரக்டரின் வாழ்க்கை, ஒரு சூழலில் வேறொரு பக்கத்துக்கு மாறிவிடும்.
பிறகு என்னை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும் மாற்றம் அடையும். அதற்கு பிறகு கிடைக்கும் ஒரு வாய்ப்பை வைத்து, தொடக்கத்தில் இருந்து எனது வாழ்க்கையை தொடங்கி, பெர்சனல் மற்றும் பணி சார்ந்த விஷயத்தில் நான் எப்படி வெற்றிபெறுகிறேன் என்பது இந்த சீரிஸின் கதை. இதன் ஒரிஜினல் வெர்ஷனை நான் பார்க்கவில்லை. நான் எப்போதுமே நடிப்புக்காக ஹோம்வொர்க் செய்வது இல்லை. படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகு அங்கு சொல்லப்படும் விஷயங்களை கூர்ந்து கவனித்து நடிப்பேன். அதுவும் இதுவரை கிளிக் ஆகியிருக்கிறது. நான் நான்காவது முறையாக வழக்கறிஞராக நடிக்கிறேன்’ என்றார்.