சென்னை, ஜூன் 23: ‘விருகம்’, ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெய்ட்டுடா’ ஆகிய படங்களை இயக்கி ஹீரோவாக நடித்தவர், சிவராம். தற்போது அவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘இருள் சூழும் இரவினிலே’. சாய்பாபா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஹீரோயின்களாக ரேகா, பூஜா அக்னிஹோத்ரி நடித்துள்ளனர். அனில் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, வயலன்ட் வேலு சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். விஷ்ணுவர்தன் இசை அமைக்க, ராஜேஷ் சவுகான் எடிட்டிங் செய்துள்ளார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
76