மும்பை: அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் ஆகியோருடன் ‘ஹவுஸ்புல் 5’ என்ற இந்திப் படத்தில் சஞ்சய் தத் இணைந்துள்ளார். ‘ஹவுஸ்புல்’ என்பது முழுநீள காமெடி திரைப்பட தொடராகும். இத்தொடரில் உருவான அனைத்து பாகங்களிலும் அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளனர். இந்தப் படங்களை சாஜித் நாடியத்வாலா, தனது நாடியத்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளார்.
ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் கதையுடன் தொடர்பு இல்லாத ஒரு புதிய கதையாக இருக்கும். ‘ஹவுஸ்புல்’ படத்தின் முதல் பாகம் 2010ல் திரைக்கு வந்தது. இதில் அக்ஷய் குமார், ஜியா கான், அர்ஜூன் ராம்பால், ஜாக்குலின் பெர்னாண்டஸ், லாரா தத்தா, சங்கி பாண்டே நடித்தனர். தற்போது ‘ஹவுஸ்புல் 5’ படத்தில் சஞ்சய் தத் இணைந்துள்ளார். தவிர அக்ஷய் குமார், அனில் கபூர், அபிஷேக் பச்சன், நானா படேகர், ரித்தேஷ் தேஷ்முக், சங்கி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.