சென்னை: திரை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு தம்பதி தயாரித்து, இயக்கி, நடித்த முதல் படமாக உருவாகிறது ‘ல் த கா சை ஆ’. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சதா நாடார். அவரது மனைவி மோனிகா செலேனா, அறிமுக நாயகன் நாயகியாக நடித்து அவர்களே இயக்கித் தயாரித்துள்ளனர். சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில், இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை அம்சம் கொண்ட படமாக இருக்கும். எங்களுக்கு சிறுவயதில் இருந்து சினிமாவில் ஆர்வம் உண்டு.
திரைப்படங்கள் மூலம் நமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தோம். அதற்கு முன்னோட்டமாக இந்த படத்தை எடுக்கிறோம். ஒரு குடும்பத்தில் காதல் மனைவியுடன் இருக்கும் ஒருவனுக்கு ஒரு பிரச்னை வரும்போது எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறான் என்பதுதான் கதை’ என்றனர். கப்பில் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு எம்.எஸ். மனோகுமார். இசை ஈ.ஜே. ஜான்சன்,படத்தொகுப்பு பரணி செல்வம்.