Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அந்த படத்தை தோற்கடித்தது மீடியாவா?கே.ராஜன் ஆவேசம்

சென்னை: சீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘எக்ஸ்டிரீம்’. இம்மாதம் 20ம் தேதி ரிலீசாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியது: இப்போதெல்லாம் நல்ல கதையுள்ள சின்ன படங்கள் தான் ஜெயிக்கிறது. ‘லப்பர் பந்து’ படம் பெரிய படங்களைத் தாண்டி ஜெயித்தது. அதை மக்கள் தான் ஜெயிக்க வைத்தார்கள். அது போல் இந்தப்படத்திலும் எல்லா மனமும் மிக நன்றாக உள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் வாழ்த்துக்கள். சமீபத்தில் ஒரு பெரிய படத்தைப் பத்திரிகையாளர்கள் தோற்கடித்துவிட்டதாகச் சொன்னார்கள். படம் நன்றாக இருந்தால் யாராலும் அதன் வெற்றியைக் குறைக்க முடியாது. நல்ல படம் எடுங்கள் பத்திரிகையாளர்கள் ஆதரவு தருவார்கள் என்றேன். இவ்வாறு ராஜன் பேசினார்.