சென்னை: கடந்த 1996ல் வெளியான ‘இந்தியன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா புரொடக்ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கமல்ஹாசன் டப்பிங் பேசி முடித்தார். இதை தொடர்ந்து கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, ‘இந்தியன் 2’ படத்தின் அப்டேட்டை நேற்று படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் இந்தியன் தாத்தா கேரக்டரான சேனாபதியின் அதிரடி சம்பவம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால், வரும் 3ம் தேதியே ‘இந்தியன் 2’ படத்தின் இன்ட்ரோ கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில், இந்தியன் தாத்தா சேனாபதியின் இன்ட்ரோ இடம்பெறும் என்று தெரிகிறது. தவிர, படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.