கார்த்தி நடித்துள்ள 25வது படம், ‘ஜப்பான்’. வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் கூறுகையில், ‘மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கியவர் கார்த்தி என்பதால், ஒரு கதையைப் பற்றிய அவரது பார்வை வித்தியாசமாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டு நான் எழுதிய கதை ‘ஜப்பான்’.
இதில் செம ஜாலியான கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். அவருக்கு ஜேடி அனு இம்மானுவேல். ஜனரஞ்சக ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு, குடும்பமாக வரும் ரசிகர்களுக்கான அம்சங்கள் இருந்தாலும், என் படத்தில் இருக்கும் சமுதாயம் சார்ந்த விஷயங்களும் இருக்கும். எப்போதுமே அதை நான் தவறவிட முடியாது. எனவே, இப்படத்தில் கார்த்தி, ராஜூ முருகன் ஆகிய இருவரது முத்திரைகளும் இருக்கும்’ என்றார்.