தனது மனைவியை விவாகரத்து செய்த சித்தார்த், பிறகு ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டார். தற்போது அதிதி ராவ் ஹைதரியும், அவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஜிம், ஓட்டல், சினிமா நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் அடிக்கடி அவர்கள் இணைந்து வருவதைப் பார்க்க முடிகிறது. சமீபத்தில் விமான நிலையத்துக்கு சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஜோடியாக வந்தனர். முகத்தில் மாஸ்க் அணிந்தபடி தனது லக்கேஜை டிராலியில் தள்ளிக்கொண்டு, யாரையும் கவனிக்காமல் சித்தார்த் வேகமாகச் சென்றார்.
அவரைப் பின்தொடர்ந்து வந்த அதிதி ராவ் ஹைதரி, தன்னைப் போட்டோ எடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், அங்கேயே நின்று சிரித்தபடி போஸ் கொடுத்தார். அவரிடம், ‘சித்தார்த்துடன் சேர்ந்து நில்லுங்கள்’ என்று போட்ேடாகிராபர்கள் சொன்னபோது, அதை நாகரீகமாக மறுத்துவிட்டு, அனைவருக்கும் ‘குட் பை’ சொன்ன அவர், பிறகு கவுண்டரில் நின்றிருந்த சித்தார்த் பக்கம் சென்றார். தனது கைப்பையை சித்தார்த்தின் லக்கேஜ் டிராலியில் வைத்துவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அவர்களின் இச்செயல் குறித்து கமென்ட் பதிவிட்ட நெட்டிசன்கள், அவர்களிடையே காதல் இருக்கா, இல்லையா என்று கேட்டுள்ளனர்.