மும்பை: தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ேஜாடியாக ‘தேவரா’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள ஜான்வி கபூர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உலஜ் இந்தி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஃபுட் பாய்சன் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்துதான் ஜான்வி கபூர் தெற்கு மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதை அவரது தந்தை போனி கபூர் உறுதி செய்துள்ளார்.