ஸ்ரீனி குப்பலா தயாரிப்பில் விக்ராந்த் ருத்ரா எழுதி இயக்கியுள்ள படம், ‘அர்ஜூன் சக்ரவர்த்தி – ஜர்னி ஆஃப் அன் அன்சங் சாம்பியன்’. விஜய ராமராஜூ, சிஜா ரோஸ், அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ், துர்கேஷ் நடித்துள்ளனர். 1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. கபடி வீரர் கேரக்டருக்காக விஜய ராமராஜூ தனது உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். ஜெகதீஷ் சீக்கட்டி ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் பாஸ்கரன் இசை அமைத்துள்ளார்.
ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் உருவாகியுள்ள இப்படம், தொடர்ந்து மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. விக்ராந்த் ருத்ரா கூறுகையில், ‘நம் கனவுகளை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை படம் சொல்கிறது. அர்ஜூன் சக்ரவர்த்தியாக விஜய் ராமராஜூவின் உழைப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. அவரது கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில், எட்டு விரிவான உடல் மாற்றங்களுக்கு தன்னை அவர் உட்படுத்திக் கொண்டார். அவரது நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் ஈர்க்கும்’ என்றார்.