சென்னை: ஆதிராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம், ‘காளியாட்டம்’. வருண் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. ஹீரோவாக கோக்கில் கே.சத்யா, வில்லனாக ஆதிராஜா, ஹீரோயினாக சமீரா மற்றும் 50 புதுமுகங்கள் நடித்துள்ளனர். எஸ்.சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் மெல்வின் இசை அமைத்துள்ளார். இளையகம்பன், பரணிதரன், தமிழ் ஆனந்த் ஆகியோர் பாடல்கள் எழுதி யுள்ளனர். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார். ராபர்ட் நடனப்பயிற்சி அளித்துள்ளார். ஆக்ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகள் அமைக்க, ராஜா புருஷோத்தமன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
படம் குறித்து ஆதிராஜா கூறுகையில், ‘யாரை எல்லாம் அழிக்க முடியாதோ, அவரை ‘அரக்கன்’ என்றும், ‘அசுரன்’ என்றும் சொல்வார்கள். அதுபோல், யாராலும் அழிக்க முடியாத ஒருவனைப் பற்றிய படமாக இது உருவாகியுள்ளது. காயத்ரி பாடிய ‘ராஜமோகினி’, வேலுவுடன் காயத்ரி பாடிய ‘முதல்முறை’, ராம் பாடிய ‘கோரனே’ ஆகிய பாடல்கள் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும்’ என்றார்.