இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் மலையாளத்தில் நடித்து முடித்துள்ள படம், ‘சேஷம் மைக்-இல் பாத்திமா’. இதில் அவர் இஸ்லாமியக் குடும்பத்தில் இருந்து கால்பந்து வர்ணனையாளராக வளரும் ைடட்டில் ரோலில் நடித்துள்ளார். வரும் 3ம் தேதி படம் வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கேரளாவில் தற்போது நடந்து வரும் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை படக்குழுவினர் பார்க்கச் சென்றனர்.
பிறகு அவர்கள் கால்பந்து போட்டியை கடைசிவரை பார்த்து ரசித்தனர். அப்போது படத்துக்காக கால்பந்து வர்ணனையாளர் பயிற்சி பெற்றிருந்த கல்யாணி பிரியதர்ஷன், திடீரென்று வர்ணனையாளராக மாறி பணியாற்றினார். அப்போது தான் பயிற்சி பெற்ற அனுபவத்தையும், படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். தொழில்முறை வர்ணனையாளர் போல் அவர் சிறப்பாகப் பணியாற்றியதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.