சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கப்பட இருக்கிறது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது பிசியாக இருக்கிறார் மணிரத்னம். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வார் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம், இந்தியன் 2 பட பாணியில் இதிலும் மல்டி ஸ்டார் நடிகர், நடிகைகள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என மணிரத்னம் எண்ணுகிறாராம். அதற்கேற்ப ஜெயம் ரவி, துல்கர் சல்மானிடம் அவர் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் இதில் சிம்பு நடிக்கலாம் என கூறப்பட்டது. அந்த வேடத்தில்தான் இப்போது துல்கர் நடிப்பார் என்கிறார்கள். தற்போது வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன். அதற்கு பின்பே இதில் நடிப்பாராம். இதில் அவர் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.