சென்னை: ரசிகர்களிடையே கமல்ஹாசனின் கறுப்பு கண்ணாடியும் மகேஷ் பாபுவின் டிஷர்ட்டும் வைரலாகியுள்ளது.
கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ புரோமோஷன் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த சன் க்ளாஸ் பற்றிய விவரத்தை ரசிகர்கள் கூகுள் செய்து தெரிந்துகொண்டார்கள். அவர் அணிந்திருந்த வித்தியாசமான கறுப்பு சன் கிளாஸ், Yohji Yamamoto என்ற ஜப்பான் நிறுவனத்தின் YY7013 என்ற மாடல் க்ளாஸ் ஆகும். இந்த கண்ணாடியின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 42 ஆயிரம் ரூபாய்.
இதேபோல் நாகார்ஜுனா, அமலா தம்பதியின் மகனும் நடிகருமான அகிலின் திருமண விழாவில் மகேஷ் பாபு ஒரு டிஷர்ட் அணிந்து வந்திருந்தார். அவரைப் பார்த்த பலரும் டிஷர்ட்டில் மகேஷ் பாபு சிம்பிளாக வந்திருக்கிறார் என சோஷியல் மீடியாவில் கருத்துகளை பகிர ஆரம்பித்தனர். வேறு சிலரோ அவர் அணிந்திருந்த டிஷர்ட் பற்றிய விவரத்தை தேடிப் பிடித்து அதையும் செய்தியாக்கிவிட்டனர்.ஹெர்மஸ் என்ற பிராண்ட் வகையை சேர்ந்த டிஷர்ட்டைதான் மகேஷ் பாபு அணிந்து வந்திருந்தார். அதன் விலை 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாம். இதை ரசிகர்கள் சிலர் கோடிட்டு சோஷியல் மீடியாவில் வைரலாக்கினர்.