ஐதராபாத்: மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், இந்தியில் அறிமுகமான ‘பேபி ஜான்’ என்ற படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், தமிழில் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்கள் மற்றும் ‘அக்கா’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். தவிர, சசி இயக்கத்தில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
வசந்த் மரியங்கண்டி திரைக்கதை எழுத, கடந்த 1990களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இதில் சுகாஸ் முக்கிய ேகரக்டரில் நடித்துள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முதலில் இப்படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், பல்வேறு சிக்கல்கல் ஏற்பட்டதால், வரும் ஜூலை 4ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படுகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது.