சென்னை: ‘பேச்சிலர்’ படத்தை ெதாடர்ந்து மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி ஜோடி சேர்ந்துள்ள படம், ‘கிங்ஸ்டன்’. கமல் பிரகாஷ் இயக்கி யுள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் அழகம்பெருமாள், ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் நடித்துள்ளனர்.
தீவிக் வசனம் எழுத, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி அளித்துள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வரும் மார்ச் 7ம் தேதியன்று படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.