Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்

சென்னை: ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகை தீபா, இயக்குனர்கள் கோகுல், ராம் சங்கையா, பேரரசு, நடிகர் வேல ராமமூர்த்தி, ஒளிப்பதிவாளர் சீனிவாசன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் சுரேஷ் நந்தா பேசும்போது, ‘தயாரிப்பாளர் மற்றும் கதைநாயகன் என்பது பெரிய பொறுப்புதான் அதை சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன். இந்த படம் அனைவரையும் திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இயக்குநர் நாகராஜ் கருப்பையா பேசியதாவது: ஒவ்வொரு கதாபாத்திரமும் மண் மனம் மாறாத கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதே போல அனைத்தும் அமைந்தது விட்டது. இந்தப் படம் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது. எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. இப்படி பட்ட அழகான காட்சிகள் பல இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் ஆள் மனதை தொடும் என்று நம்புகிறேன். இப்படத்தில் வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.