மலையாள நடிகை மீனாட்சி தினேஷ், விக்ரம் பிரபு ேஜாடியாக ‘லவ் மேரேஜ்’ என்ற படத்தில் நடித்ததன் மூலமாக கோலிவுட்டுக்கு வந்துள்ளார். அவர் கூறுகையில், ‘தமிழ் ரசிகர்களிடம் எனக்கு கிடைத்துள்ள வரவேற்பை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் நடிப்புத்திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். எனக்கென்று தனி இமேஜை வளர்த்துக்கொள்வேன். ஸ்டீரியோடைப் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். அழுத்தமான, மிகவும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பேன்.
சூர்யாவின் நடிப்புக்கு நான் தீவிர ரசிகை. அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். சூர்யாவுடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இனி வரும் நாட்களில் அந்த கனவு நனவாகும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் அவரைப் போன்ற ஒருவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது’ என்றார். மலையாளம் கலந்த தமிழில் பேசும் அவர், விரைவில் சரளமாகப் பேச கற்றுக்கொண்டு, தனது படத்துக்கு தானே டப்பிங் பேசுவேன் என்றார். கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பல மீனாட்சிகள் இருப்பதால், தன்னை ‘மீனாட்சி தினேஷ்’ என்று குறிப்பிடும்படி கேட்டுக்கொண்டார்.