தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ள ஸ்ரீலீலாவின் கைவசம் 8 படங்களுக்கு மேல் இருக்கிறது. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள 5 படங்கள், இனி வரும் 5 மாதங்களில் அடுத்தடுத்து வெளியாகின்றன. இது ேவறெந்த நடிகைக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு என்று கூறப்படுகிறது. ராம் பொதினேனியுடன் நடிக்கும் ‘ஸ்கந்தா’ படம் விநாயகர் சதுர்த்தி அன்றும், பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ படம் ஆயுத பூஜை அன்றும், பஞ்சா வைஷ்ணவ் தேஜ்ஜுடன் நடிக்கும் ‘ஆதிகேசவா’ படம் தீபாவளி அன்றும், நித்தினுடன் நடிக்கும் ‘எக்ஸ்ட்ரா-ஆர்டினரி மேன்’ படம் கிறிஸ்துமஸ் விடுமுறையிலும், மகேஷ் பாபுவுடன் நடிக்கும் ‘குண்டூர் காரம்’ படம் அடுத்த வருட சங்கராந்தி பண்டிகை அன்றும் வெளியாகிறது. லீலாவின் அசுர வேக வளர்ச்சி, ஏற்கனவே அங்கு முன்னணியில் இருக்கும் பல ஹீரோயின்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
34