லியோ திரைப்பட வெற்றிவிழா நிகழ்ச்சியில் பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என விஜய் மக்கள் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்.,19ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இப்படம் 10 நாட்களில் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நேரு உள்விளையாட்டு அரங்கில், லியோ படத்தின் வெற்றி விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு வருவோர், 4 மணி முதல் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.