சென்னை: ‘தர்பார்’ படத்தில் ரஜினி மகளாகவும் ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்தவர் நிவேதா தாமஸ். தமிழ், மலையாளம் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். உடல் மெலிந்து ஸ்லிம்மாக தோன்றி வந்த நிவேதா தாமஸ், திடீரென உடல் எடை கூடிவிட்டார். தைராய்டு பிரச்னையால் அவர் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல் அமைப்பை கேலி செய்யும் விதமாக நிவேதாவை சிலர் ட்ரோல் செய்து வந்தனர்.
அதே சமயம் உருவ கேலி கூடாது என ரசிகர்கள் சிலர் அவர்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இது பற்றி நிவேதா தாமஸ் கூறுகையில், ‘உருவ கேலி என்பது பெயரளவுக்கு சிலருக்கு தோன்றலாம். ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எந்த அளவுக்கு காயம் தரும் என்பதை சிலர் உணர்வதில்லை. வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். அதிலிருந்தும் விடுபட்டு வருவேன் என்ற நம்பிக்கை மட்டுமே எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையை இழந்துவிட மாட்டேன்’ என்றார்.