சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவர் மாளவிகா. தற்போது தமிழில் கார்த்தியுடன் சர்தார் 2, தெலுங்கில் பிரபாசுடன் ராஜாசாப், மலையாளத்தில் மோகன்லாலுடன் ஹிருதயபூர்வம் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்கிறார். மேலும் மாளவிகா இன்ஸ்டாவில் பதிவிடும் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் மாளவிகாவை விமர்சித்து பதிவிட அதற்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.‘‘போட்டோஷூட், மாடலிங் செய்ய போடும் உழைப்பை நீங்கள் படங்களில் செய்வதில்லையே’’ என அந்த நபர் விமர்சித்து இருக்கிறார். அதற்கு காட்டமாக பதில் கொடுத்த மாளவிகா, ‘‘நான் தங்கலான் படத்தில் போட்ட உழைப்பு, transformation ஆகியவற்றை நீங்கள் பார்க்கவே இல்லையா. நான் எதுவும் சொல்வதற்கு இல்லை’’ என கூறி இருக்கிறார்.