சென்னை: மாணவர்களுக்கான பாடத்தில் நடிகர்களைப் பற்றிய பாடம் இடம்பெறுவது அடிக்கடி நடக்கும் விஷயம் கிடையாது. திடீரென எப்போதாவது இதுபோல் கலைத்துறையில் சாதித்த ஜாம்பவான்களை பற்றி பாடம் இடம்பெறும். அதுபோல் இப்போது கல்லூரி மாணவர்களுக்கான பாடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் நான்காண்டு படிப்பான பிஏ வரலாறு (ஹானர்ஸ்) பிரிவு மாணவர்களின் பாடத்தில் மம்முட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாமாண்டு மாணவர்கள் தாங்களாகத் தேர்வு செய்து படிக்கிற பாடப்பிரிவுகளில் ஒன்றான ‘மலையாள சினிமா வரலாறு’ பாடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம்பிடித்துள்ளன. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பயில்வதற்கு முன்னர் மகாராஜா கல்லூரியில் படித்தவர் மம்மூட்டி. தான் படித்த கல்லூரியிலேயே தன்னைக் குறித்து மாணவர்கள் பாடமாகப் பயில்வதென்பது பெரிய கவுரமாகும். அந்த கவுரவம் மம்மூட்டிக்கு கிடைத்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
35