சென்னை: 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் இணைந்து உருவாக்கிய படம் ‘தக் லைஃப்’. சமீபத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என ரசிகர்கள் எதிர்மறை கருத்துகளை தெரிவித்தனர். இது குறித்து மணிரத்னம் பேசியிருக்கிறார். அவர் கூறியது: எங்கள் இருவரிடம் இருந்து இன்னொரு ‘நாயகன்’ படம் எதிர்பார்த்தவர்களுக்கு, நான் சொல்வது ஒன்று தான், எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் முற்றிலும் வேறு ஒன்றை செய்ய விரும்பினோம். ஓவர் எதிர்பார்ப்பு என்பதை தாண்டி இது வேறு விதமான எதிர்பார்ப்பாக அமைந்துவிட்டது. இவ்வாறு மணிரத்னம் கூறி இருக்கிறார்.
72