ஐதராபாத்: தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் நடிக்கும் சோபிதா துலிபாலா, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கேரக்டரில் நடித்தார். அவரும், நடிகர் நாகசைதன்யாவும் காதலிப்பதாகவும், விரைவில் அவர் களின் திருமணம் நடக்கும் என்றும் தகவல் வெளியானது. இதை மறுத்த அவர்கள், பிறகு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதுகுறித்து சோபிதா துலிபாலா, ‘எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது, எந்த எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது. நான் நினைத்த மாதிரி நிச்சய தார்த்தம் எளிமையாக, இனிமையாக, மனதுக்கு மிக நெருக்கமாக நடந்தது.
அந்த கணம் என் மனம் நிரப்பி வழிந்தது. இதுபோன்ற தருணத்தில் தெலுங்கு மக்களின் சடங்குகள் சார்ந்த விஷயம் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மட்டும் ஏனோ சோபிதா துலிபாலா பதிலளிக்க மறுத்துவிட்டார்.