ஐதராபாத்: பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. தமிழில் சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பிரகதி நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் பிரகதி நடித்திருக்கிறார். இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அடிக்கடி போட்டோக்கள் பகிர்வது, ஹிட் பாட்டுக்கு ஆட்டம் போடுவது என இணையத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
பிரகதி தன்னுடைய இருபதாவது வயதில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரகதி பிரிந்துவிட்டார். பல வருடமாக மறுமணம் செய்யவில்லை. இப்போது அவருக்கு 47 வயதாகிறது.
இந்நிலையில், டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை பிரகதி காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் பரவியது. இந்த செய்தியால், கடுப்பான பிரகதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதாரம் இல்லாமல் பொய் தகவல் பரப்புவதை காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், நடிகை என்பதற்காக ஏதாவது பேசலாமா என்றும் கொதித்துப்போய் வீடியோவில் பேசியிருக்கிறார்.