ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுத்தில் ஏ.பி.அர்ஜுன் இயக்கியுள்ள படம் ‘மார்ட்டின்’. துருவா சர்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். இதில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சுக்ருதா வாக்லே, அச்யுத்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட ஆக்ஷன் படமான ‘மார்டின்’ அக்டோபர் 11ம் தேதி வெளியாகிறது. 5 இந்திய மொழிகள் உட்பட 13 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் உதய் மேத்தா தெரித்துள்ளார்.
இப்படத்தின் சர்வதேச டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. மேலும் இதில் 21 நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு படக் குழுவினரிடம் கேள்விகளும் கேட்டனர். டிரெய்லர் வெளியீட்டில் பேசிய துருவா சார்ஜா ராட்விலார் நாயுடன் நடித்தது மாபெரும் சவாலாக இருந்ததாகவும் இப்படத்திற்காக 20கிலோ உடல் எடை குறைந்ததாகவும் தெரிவித்தார் .
“கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் படத்தை வெளியிடுகிறோம். தவிர, பெங்காலி, அரபு, ஜப்பான், சீனா, ரஷ்யா, அரபு, ஸ்பானிஷ், கொரிய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.