சென்னை: சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டியில், ‘‘எனக்கு விவாகரத்தான சமயத்தில் பலரும் என்னை செகண்ட் ஹேண்ட், வாழ்க்கை வீணாக போய்விட்டது, சமந்தாவை யூஸ் செய்துவிட்டார்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். அப்போது எல்லாம் எனக்கு கஷ்டமாக இருந்தது. இந்தப்பிரச்சனை என்பது எனக்கு மட்டுமின்றி என் குடும்பத்துக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. அந்த சமயத்தில் நான் கொஞ்சம் டவுனாகத்தான் இருந்தேன். அதற்கு என்ன செய்ய முடியும். ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டா இருக்க முடியும். சரி நடந்தது நடந்துவிட்டது, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்து வாழ்கிறேன். மகிழ்ச்சியாக வாழ முயன்றால், அதையும் நான் பழிவாங்குவதற்காக வாழ்கிறேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அர்த்தம் இல்லை, நான் என் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன், இவ்வளவு பிரச்சனைக்குப்பின் என்னுடன் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்’’ என்று சமந்தா எமோஷ்னலாக பேசியிருக்கிறார், அப்போது அவர் கண் கலங்கினார்.
37