முஹம்மது நபிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரவிருக்கும் மீலாதுன் நபி திரைப்படம் ஒரு பரிசோதனைத் திட்டமாகும். ஆந்தை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது இப்படத்தின் பாடல்கள், திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இது முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படமாக்கப்படுவதாகவும், நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை என்றும், சென்னையைச் சேர்ந்த மூன்று முக்கிய இமாம்கள் நபிகளாரின் சம்பவங்களை விவரிப்பார்கள் என்றும் விளக்கினார் இயக்குநர் மில்லத் அகமது.
படத்தின் 23.09.24 அன்று சாலிகிராமத்திலுள்ள கிரசெண்டோ மியூசிக் லேப்பில் பாடல் பதிவுடன் தொடங்கப்பட்டது. இதில் வரும் பாடல்கள் அனைத்தும் முற்றிலும் புதுமையாக ஒரே ஒரு இசைக்கருவி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்று இசையமைப்பாளர் எஸ்ஆர். ராம் பகிர்ந்து கொண்டார். இதிலுள்ள பாடல்களை நௌஷாத் அலி (மறைந்த நாகூர் ஹனிபாவின் மகன்), ஜென்டில்மேன் ஷம்சுதீன், ரஹிமா பேகம் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் ஃபரீதா ஆகியோர் பாடியுள்ளார்கள். இதனை ஜீ6 மூவிஸ் சார்பில் பிரான்ஸ் அய்யூப் மரைக்கார் தயாரிக்கிறார்.