சென்னை: அண்மையில் வெளிவந்த ‘கலைஞர் 100 கவிதைகள் 100’ கவிதை தொகுப்பிலும் பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘திருக்குவளை சூரியன்’ கவிதை இடம்பெற்றுள்ளது. இந்த கவிதை பெரும் பாராட்டுகளை பெற்றது. இந்நுலை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். கோச்சடையான், அண்ணாத்த, விஸ்வாசம் படங்கள் வெளிவந் போது அஸ்மின் எழுதிய புரோமோ பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைராலாகின.
நான் படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்தபோது வர்சன் இசையில் இவர் எழுதி்ய ‘போங்கடா நாங்க பொங்கலடா’ பாடல் உழவர்களின் வலியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது. அஸ்மின் கூறும்போது, ‘தமிழ் சினிமா பாடல்களில் மாற்றம் கொண்டு வருவதுதான் ஆசை.
காதல் பாடலாக இருநதாலும் அதிலும் நல்ல கருத்துகளை சொல்வதே நோக்கம்’ என்கிறார். இவர் எழுத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா பாடிய ‘மாமாகுட்டிமா’, ஜீவி. பிரகாஷ், லண்டன் பாடகி சர்மினி இணைந்து பாடிய ‘ஞாயிறே’ தனிப்பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளன. திரும்பிப்பார், பைலா,யூஆர் நெக்ஸ்ட், தி ஸ்டுடியோ, பைனாகுலர், நாளைய மாற்றம், நீறுபூத்த நெருப்பு, காமா ஆகிய படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார்.