பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர், துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானார். தற்போது நானி ஜோடியாக ‘ஹாய் நான்னா’ படத்தில் நடித்துள்ளார். தனது மனைவியை இழந்து குழந்தையுடன் வாழ்ந்து வரும் நானியைக் காதலிக்கும் கேரக்டரில் நடித்துள்ள மிருணாள் தாக்கூர், நானியுடன் முத்தக்காட்சியிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ‘ஹாய் நான்னா’ படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ‘மிருணாள் வெகுவிரைவில் தெலுங்கு மணமகனைப் பார்த்து திருமணம் செய்துகொண்டு, ஐதராபாத்திலேயே செட்டிலாக வேண்டும்’ என்று பேசினார். உடனே இப்பேச்சு வைரலானது.
இதையடுத்து, தெலுங்கு நடிகர் ஒருவரை மிருணாள் தாக்கூர் காதலிப்பதாகவும், அதையே அல்லு அரவிந்த் இப்படி சூசகமாக குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியானது. இதையறிந்து பதறிய மிருணாள் தாக்கூர், ‘எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இத்தகவல் குறித்து என்னிடம் கேட்கின்றனர். இதுவரை எந்த தெலுங்கு பையனையும் நான் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை. அந்த விழாவில் அல்லு அரவிந்த் சார் சும்மா ஜாலிக்காக அப்படிப் பேசி என்னை வாழ்த்தினார். அது இவ்வளவு தூரம் வதந்தியாக மாறும் என்று நாங்கள் நினைக்கவில்லை’ என்று விளக்கம் அளித்தார். அவர் இப்படி மறுத்தாலும், நெருப்பு இல்லாமல் புகையாது என்று நெட்டிசன்கள் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.