சென்னை: இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை மேடை நாடகமாக உருவாகிறது. இந்த நாடகம் வரும் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் வாணி மகால் மற்றும் நாரத கான சபையில் நடைபெற உள்ளது. சுப்புலட்சுமியாக மேடை நாடக நடிகை லாவண்யா நடிக்கிறார். எழுத்தாளர் வி.எஸ்.வி.ரமணன் எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்’ புத்தகத்தை தழுவி அதே பெயரில் இந்த நாடகம் நடைபெறுகிறது.
இதை பம்பாய் ஞானம் இயக்குகிறார். தக்ஷின் இசையமைக்கிறார். த்ரீ நிறுவனம் மற்றும் கஸ்தூபா மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘இந்த சுயசரிதை எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு ஒரு இதயப்பூர்வமான அஞ்சலியாகும். அவரது கருணை, பக்தி மற்றும் இசை மீதுள்ள அபரிமிதமான ஞானத்ைத உள்ளடக்கியது இந்நாடகம். மரியாதை மற்றும் போற்றுதலுடன் அவரது வாழ்க்ைக பயணத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்’ என நாடக்குழு தெரிவித்துள்ளது.