தென்னிந்திய படவுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியவர், சமந்தா. பாலிவுட் வரைக்கும் சென்று வெப்தொடர்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட அவர், அடுத்து ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். 2021ல் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சமந்தா, சமீபத்தில் இந்தி வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை தீவிரமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சமந்தா தரப்பில் இதுகுறித்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் அவுட்டிங் செல்வது, அப்போது எடுக்கும் சில போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் துபாய் சென்றுள்ள சமந்தா, அங்கு எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள கேப்ஷன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில், ‘எந்த அலையும் நிலைக்காது. எந்த புயலும் நிரந்தரமாக இருக்காது. எல்லாவற்றையும் கடந்து சென்றாக வேண்டும். அதற்கு பிறகே வழியை கண்டுபிடிக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவை படித்த நெட்டிசன்கள், இது நாக சைதன்யாவை மறைமுகமாக சாடுவது போல் இருப்பதாக கமென்ட் செய்து வருகின்றனர்.