Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதலிக்க நேரமில்லை பட டைட்டிலில் நித்யா மேனன் பெயருக்குப் பின்னால் என் பெயர் வருவதில் என்ன தவறு?

சென்னை: ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், விநய் ராய், யோகி பாபு, லால், டிஜே பானு, லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்துள்ள ரொமான்ஸ் திரில்லர் படம், ‘காதலிக்க நேரமில்லை’. யு.கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பேசுகையில், ‘ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற கிளாசிக் படத்தின் டைட்டில் எங்களுக்கு கிடைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.

டைட்டிலில், நித்யா மேனனின் பெயருக்குப் பிறகு ஏன் எனது பெயர் வருகிறது என்று பலர் கேட்டனர். இதற்கு என்மீதான நம்பிக்கைதான் காரணம். ஹீரோவின் பெயருக்கு முன்னால் ஹீரோயின் பெயரை இடம்பெறச் செய்தால் என்ன? திரை வாழ்க்கையில் இதுபோல் நிறைய விஷயங்களை உடைத்துள்ளேன். இது மட்டும் ஏன் கூடாது? கண்டிப்பாக இந்த வருடம் நான் மீண்டு வருவேன்.

அடுத்தடுத்து வெற்றிபெறக்கூடிய தரமான படங்கள் என் கைவசம் இருக்கின்றன. இயக்குனர் கே.பாலசந்தர் தனது படங்களில் பல்வேறு விஷயங்களை துணிச்சலாக உடைத்திருப்பார். அதுபோல், ஜென் ஜி தலைமுறையில் கிருத்திகா அதைச் செய்துள்ளார். இது யு/ஏ சர்ட்டிபிகேட் வாங்கிய படம். அனைவரும் தியேட்டருக்கு குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கலாம்’ என்றார்.