சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் வில்லனாக நட்டி நட்ராஜ் நடித்து வருவதாக தகவல் வெளியாகிறது. நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே “கங்குவா” படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கங்குவா பதத்தின் வில்லன் குறித்த அப்டேட் தற்போது லீக் ஆகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. கர்ணன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய நட்டி, சூர்யாவுடன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.