சென்னை: நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீரசமர். பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நுழைந்த வீரசமர், பல பிரபல படங்களுக்கு அவருடன் பணியாற்றினார். ‘வீரசேகரன்’ என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். தற்போது நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இளைய பாலா இயக்கத்தில் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் ‘விஜேஎஸ் 49’ படத்தில் ஆர்ட் டைரக்டராகவும் பணிபுரிகிறார். அதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
40