ஐதராபாத்: நயன்தாரா சம்பள விவகாரத்தில் சிரஞ்சீவி தலையீட்டு பிரச்னையை முடித்து வைத்திருக்கிறார்.
அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டது. ஒரு படத்தில் நடிக்க ரூ.8 கோடி முதல் ரூ.12 கோடி வரை நயன்தாரா சம்பளமாக வாங்குகிறார். இந்த படத்தில் நடிக்க அவர் ரூ.18 கோடி வேண்டும் என கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்தார்.
18 கோடி ரூபாய்க்கு குறைவாக கொடுத்தால் நடிக்க முடியாது என நயன்தாரா தரப்பு கறாராக சொல்லிவிட்டது. இதனால் தயாரிப்பாளருக்கும் நயன்தாராவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிரஞ்சீவி தலையிட்டு நயன்தாராவிடம் பேசியிருக்கிறார். இதையடுத்து படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டார். அவருக்கு சம்பளமாக ரூ.15 கோடி தரப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் இன்னொரு ஹீரோயினாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். அவரது கேரக்டர் படத்தில் கவர்ச்சியாக இருக்குமாம்.