ெசன்னை: லட்சுமிகாந்தன் கொலை வழக்கை பின்னணியாகக் கொண்டு உருவாகும் வெப்சீரிஸில் நஸ்ரியா நடிக்கிறார். 1940களில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் அப்போதைய சினிமா சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான சம்பவங்களை வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளதாம். இதில் தியாகராஜ பாகவதர் கேரக்டரில் நட்டி நட்ராஜ் நடிக்கிறார். வக்கீல் கேரக்டரில் நஸ்ரியா நடிக்கிறார். என்எஸ்கே வேடத்தில் ரவிந்திர விஜய் நடிக்கிறார்.
இவர் ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடித்தவர். இந்த வெப்சீரிஸை இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். அவரது உதவி இயக்குனர் சூர்யா பிரதாப் இயக்குகிறார். தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பிறகு தமிழில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த வெப்சீரிஸ் மூலம் அவர் தமிழுக்கு திரும்பியுள்ளார்.