கரைகளை தொட்டபடி வெள்ளம் அதிவேகமாக ஓடும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்களுக்கு இடையே பாலம் என்பது மிகவும் அவசியம். அந்த ஊர்களுக்கு பாலம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பல ஊர்களைச் சுற்றி வந்து தங்கள் ஊர்களுக்குச் செல்ல வேண்டிய சிரமமான நிலையில், அதுபற்றி அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் சொல்லியும் பலன் இல்லை. இந்நிலையில், திடீரென்று அங்கு ஒரு பாலம் உருவாகிறது. அது எப்படி என்று சொல்லும் கதையுடன் ‘ராமர் பாலம்’ படம் உருவாகியுள்ளது. சினிமா கம்பெனி சார்பில் டாக்டர் கர்ணன் மாரியப்பன், எம்.முருகேசன் தயாரித்துள்ளனர். ஷக்தி சிதம்பரம், வின்சென்ட் செல்வா ஆகியோரிடம் பணியாற்றிய எம்.சண்முகவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். புதுமுகங்கள் மது, நிகிதா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆனந்த சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கோபால் இசை அமைத்துள்ளார். கலைக்குமார், கவிபாஸ்கர் பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 25ம் தேதி திரைக்கு வரும் படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.
33