சென்னை: உடல் எடை குறைந்து, புதிய தோற்றத்துக்கு விஜய் சேதுபதி மாறியிருக்கிறார். சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்போது அவரது தோற்றத்தை பார்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். பென்சிலால் கோடு போட்டதுபோன்ற மெல்லிய மீசை மட்டும் வைத்துக்கொண்டு, உடல் எடையும் கணிசமாக குறைந்து புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி காணப்பட்டார். அவர் தற்போது, ‘காந்தி டாக்ஸ்’, ‘மகாராஜா’, ‘பிசாசு 2’ படங்களில் நடித்து வருகிறார். இதில் எந்த படத்திலும் இந்த தோற்றம் கிடையாதாம். மிஷ்கின் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்துக்காக இந்த கெட்அப்பில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி எதுவும் விளக்கம் அளிக்க விஜய் சேதுபதி மறுத்துவிட்டார். மிஷ்கின் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, ஜெயராம் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைப்பார் என தெரிகிறது. ஏற்கனவே மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
182