சென்னை: படவுலகில் பிரபலமான நட்சத்திர காதல் தம்பதி களாக வலம் வருபவர்கள் சூர்யா, ஜோதிகா. தற்போது படப்பிடிப்பில் இருந்து கிடைத்த விடுமுறையை கொண்டாடுவதற்காக சீஷெல்ஸ் தீவு சென்ற சூர்யா, ஜோதிகாவின் ரொமான்ஸ் போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள சூர்யாவும், ேஜாதிகாவும் அங்கு தனி ஹெலிகாப்டரில் கடலுக்கு மேல் பயணித்தது, பிறகு தேங்காய் செடியை நட்டது, கடல் உணவுகளை சாப்பிட்டது, செம ஜாலியாக கடற்கரையில் ஓடியது, ரொமான்டிக்காக இருந்தது போன்ற சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள், ஜோதிகாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அதோடு, ‘மீண்டும் ஒருமுறை உன்னோடு சொர்க்கத்தில்’ என்ற ஒரு கேப்ஷனையும் ஜோதிகா வெளியிட்டுள்ளார். அடுத்து சூர்யாவுக்கு ‘கருப்பு’ என்ற படம் இந்த ஆண்டிலேயே திரைக்கு வரவிருக்கிறது.