சென்னை: மலையாள படங்களை தமிழில் டப் செய்து, அதற்கான வசனங்களையும் எழுதுபவர் ஆர்.பி.பாலா. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ முதல் ‘தொடரும்’ வரை தமிழ்நாட்டில் இப்படங்களின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம். இது குறித்து ஆர்.பி.பாலா கூறியது: ‘புலி முருகன்’ படம் தமிழில் வந்தபோது தமிழுக்காக நமது பண்பாடு தெரியும்படி மாற்றங்களைச் செய்தேன். அதேபோல் அனைத்து படங்களுக்கும் இது ஒரு மொழி மாற்றுப் படம் என்று தடைகளை உணராத வகையில் வசனங்களையும் அமைத்திருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு வந்த ‘லூசிபர்’ 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.
அதேபோல ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘ஆடு ஜீவிதம்’ படங்களுமே 100 கோடி வசூல் செய்தன. பிறகு வந்த ‘எம்புரான்’ 250 கோடி வசூல் செய்தது. இப்போது வந்துள்ள ‘தொடரும்’ மலையாளத்தில் மட்டுமே அதுவும் ஐந்து நாட்களில் நூறு கோடி வசூல் செய்தது. இந்த வசூல் தொடர்கிறது. பிற இடங்களில் 175 கோடி போய்க் கொண்டிருக்கிறது. தமிழிலும் வெற்றி பெற்றுள்ளது. இப்படி நான் பணியாற்றிய படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன. இந்த நேரத்தில் என் வாழ்க்கையையே திசை மாற்றிய மோகன்லால் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.