லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் தேர்வுக்குழுவில் உறுப்பினர்களாக இணைய, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகச்சிறந்த கலைஞர்களுக்கு வருடந்தோறும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்த நடிகர் சூர்யா, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான (2023)ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இந்தியர்கள் உள்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தென்னிந்தியப் படவுலகில் இருந்து இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பான் இந்தியா நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், கேமராமேன் கே.கே.செந்தில் குமார் ஆகியோரும், பாலிவுட்டில் இருந்து தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
61