ஐதராபாத்: சமந்தா, நாகசைதன்யா இருவரும் இணைந்து நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் ‘யே மாயா சேசாவே’. இதன்பின் ‘மனம்’ எனும் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின் சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் நாகசைதன்யா. இந்த நிலையில், சமந்தா – நாகசைதன்யா இருவரும் இணைந்து நடித்த முதல் படமான ‘யே மாயா சேசாவே’ 15 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. வருகிற ஜூலை 18ம் தேதி ‘யே மாயா சேசாவே’ படம் ரீ ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில், இப்படத்தை விளம்பரப்படுத்த புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளப்போகிறார்கள் என தகவல்கள் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா பதில் கொடுத்துள்ளார்.‘‘இல்லை, நான் யாருடனும் ‘யே மாயா சேசாவே’ படத்தின் விளம்பரத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை. அந்த படத்தை விளம்பரப்படுத்தவும் எனக்கு விருப்பம் இல்லை. இந்த பேச்சு எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீங்க’’ என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.