சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது:
தயாரிப்பாளர் சங்கத்துக் கும், பெப்சி அமைப்புக்குமான கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது என்று பெப்சி அறி வித்துள்ளது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலை யில், தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து வரும் 14ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை பெப்சி அறிவித்துள்ளது. இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. திட்டமிட்டபடி வரும் 14ம் தேதியன்று படப் பிடிப்புகள் நடக்கும்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முழு ஆதரவுடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பில் 5 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். தகுதி, திறமை, ஆர்வம் அடிப்படையில் உறுப்பினர் கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு ஆடிஷன் நடத்தப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கைக்கான தொகை குறைவு. தயாரிப்பாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு வலிமையானது. எங்கள் மீது ஆதாரமின்றி அவதூறு பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.