சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம், ‘அங்கம்மாள்’. இது மும்பை திரைப்பட விழாவில், தெற்காசியப் பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெறுவதும் இதுவே முதல்முறை. திரைக்கதை எழுதி விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும், பாடகருமான பிரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல் இணைந்து தயாரித்துள்ளனர். அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் நடித்துள்ளனர். சம்சுதீன் காலித், அனு ஆப்ரஹாம், ஈ.எல்.விஜின் வின்சென்ட் பீப்பி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். முகம்மது மக்பூல் மன்சூர் இசை அமைக்க, பிரதீப் சங்கர் எடிட்டிங் செய்துள்ளார். கோபி கருணாநிதி அரங்குகள் அமைத்துள்ளார். சுதாகர் தாஸ், விபின் ராதாகிருஷ்ணன் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.